காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அமெரிக்க அரசின் IVLP திட்டத்தின் கீழ், அந்நாட்டின் விருந்தினராக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார்.
அவரது பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து, மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அதன் துணைச் செயலாளர் கே.முஹ்ஸின் (முர்ஷித்) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசின் விருந்தினராக, அந்நாட்டில் பயணம் மேற்கொள்வதற்கு, நமது காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது எனவும், அவரது பயணம் சிறப்புற மனதார வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். |