தூத்துக்கு சுப்பையா வித்யாலயம் மேனிலைப்பள்ளியில், இம்மாதம் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மாணவ-மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரும் பங்கேற்று, பல போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
09ஆம் வகுப்பு பயிலும் மாணவி சித்தி ஃபவ்ஸியா தமிழ் கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடமும்,
10ஆம் வகுப்பு மாணவி பி.எம்.ஏ.சாரா, ஆங்கில பேச்சுப்போட்டியில் இரண்டாமிடமும்,
11ஆம் வகுப்பு மாணவி எல்.கே.ஆயிஷா சித்தீக்கா, ஓவியப் போட்டியில் மூன்றாமிடமும்,
08ஆம் வகுப்பு மாணவி மஹ்மூதா, Origami (Creative Art) போட்டியில் மூன்றாமிடமும்,
11ஆம் வகுப்பு மாணவி டி.டி.கதீஜா பீவி, நெருப்பு - புகையின்றி சமைக்கும் போட்டியில் இரண்டாமிடமும்,
11ஆம் வகுப்பு மாணவி ஸஃப்ரீன், மாற்றுடை போட்டியில் மூன்றாமிடமும்,
11ஆம் வகுப்பு மாணவியரான எஸ்.ஸஃப்ரீன் - மர்யம் ரஷீதா இணை Partners Parade (Hair Do) போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளனர்.
சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியரை, பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியை மீனா சேகர் தலைமையிலான ஆசிரியையர் பாராட்டினர்.
இத்தகவலை, காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் தெரிவித்துள்ளார். |