காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியராக, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் தலைவர் (பொறுப்பு) நஹ்வீ செய்யித் முஹம்மத் புகாரீ மகன் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ, இம்மாதம் 24ஆம் தேதி முதல் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இவர், 1970 முதல் 1973ஆம் ஆண்டு வரை, ஈரோடு தாவூதிய்யா அரபிக்கல்லூரியில் பயின்று, திருக்குர்ஆன் மனனத்தை முடித்து, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) பெற்றார்.
1973 முதல் 1980 வரை இவர் ‘மவ்லவீ ஆலிம்’ கல்வி பயின்றார். சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியிலும், அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியிலும் பயின்று, இறுதியாக திருப்பூர் ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியிலும் பயின்று, 1980ஆம் ஆண்டு ‘மவ்லவீ ஆலிம்’ ஸனது பெற்றார்.
1982 முதல் 1989ஆம் ஆண்டு வரை காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1989 முதல் 2006ஆம் ஆண்டு வரை இலங்கை பட்டுப்பிட்டிய நகரிலுள்ள மின்ஹாஜுல் உலூம் அரபிக்கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார்.
2006 முதல் 2012ஆம் ஆண்டு வரை சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார்.
24 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மீண்டும் இவர் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. |