மின் பற்றாக்குறையைக் காரணங்காட்டி, கடந்த 3 நாட்களாக மீண்டும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் வினவியபோது, காற்றாலை மின் உற்பத்தி அளவு குறைந்துள்ளதால் சீரான மின் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாடம் காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரமும், அவ்வப்போது சுழற்சி முறையில் இரவில் சுமார் 1 மணி நேரமும் மின் தடை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலுள்ள 5 யூனிட் மின் உற்பத்திக் கலங்களில், முதலாவது யூனிட் பழுதடைந்துள்ளதும் மின் தடைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. |