காயல்பட்டினம் நகரின் பெருமைகளாக கூறப்படுவதில் இங்கு மதுக்கடைகள் இல்லை என்பதும் ஒன்று.
இருப்பினும் - புதிய பேருந்து நிலையம் வளாகம் மது விற்க பயன்படுத்தப்படுகிறது என்றும், நகரின் ஒரு பகுதியில் - அனைவரும் அறிந்தே - தனி நபர் ஒருவர் மது விற்கிறார் என்றும், அவரின் வாடிக்கையாளர்களில் அதிகாரிகளும் உண்டு என்றும் குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து வந்துள்ளது.
நகரில் குடி போதையில் நடக்கும் தகராறுகளும் அன்றாடும் காணும் காட்சிகள்.
காயல்பட்டினம் பெருமைகளின் ஒன்றான அதன் கடற்கரையின் நுழைவு வாயிலில் - இங்கு மது அருந்தக்கூடாது என தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இருப்பினும் - கடற்கரையின் ஓரப்பகுதிகளில் நடந்து வந்த மது அருந்தும் விஷயம், தற்போது நடுப்பகுதிகளிலும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது.
மது அருந்துபவர்கள் - வெற்று மது குப்பிகளுடன் தண்ணீர் உறைகள், தின்பண்ட எச்சங்களையும் க்டற்கரை மணலில் வீசி விட்டு செல்கின்றனர்.
இது போன்ற செயல்கள் நடைபெறுவதும், பொதுமக்கள் எச்சரிப்பதும், கைகலப்பு ஏற்படுவதும் கிட்டதட்ட அன்றாட நிகழ்வுகள் போல மாறி வருகின்றன.
ஜூலை 11, இரவு 11 மணியளவில் கடற்கரையில் மது அருந்திவிட்டு ஒரு சிலர் வீசி சென்றவை
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
சாளை பஷீர்
|