காயல்பட்டினம் தாயிம்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், இம்மாதம் 05ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 150 முதல் 200 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
நடப்பாண்டு ரமழான் துவக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சி வினியோகக் காட்சிகள்:-
இப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களான எஸ்.எல்.அஹ்மத் காஸிம் இமாமாகவும், ஷம்ஸ் அலியார் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, ஹாஃபிழ் ஏ.எம்.ஷெய்க் தாவூத் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.கே.யாஸீன் மவ்லானா துணைத்தலைவராகவும், ஹாஜி எம்.அஹ்மத் செயலாளராகவும், எஸ்.எச்.முஹம்மத் நியாஸ் துணைச் செயலாளராகவும், ஹாஜி கே.எம்.தவ்லத் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர். எம்.எச்.ஷம்சுத்தீன் தலைமையில், நடப்பாண்டு கஞ்சி கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
படங்களுள் உதவி & தகவல்:
சீனா S.H.மொகுதூம் முஹம்மத் (சீனாஷ்)
படங்கள்:
முஹம்மத் ஹஸன் (mamas)
மற்றும்
ஸிராஜுத்தீன்
தாயிம்பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோகம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தாயிம்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தாயிம்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்திகளைக் காண பின்வரும் இணைப்புகளில் சொடுக்குக!
பாகம் 1 பாகம் 2
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |