செய்தி எண் (ID #) 14088 | | |
செவ்வாய், ஜுலை 15, 2014 |
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் மாமனார் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3808 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய |
|
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் தாய்மாமாவும், மாமனாருமான - காயல்பட்டினம் நெய்னா தெருவைச் சேர்ந்த டீ.ஓ.மஹ்மூத் இன்று அதிகாலை 05.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,
மர்ஹூம் தைக்கா உமர் ஹாஜி அவர்களின் மகனும்,
மர்ஹூம் ஹாஜி குளம் லெப்பைத்தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி டீ.ஓ.முஹம்மத் அய்யூப் என்பவரின் சகோதரரும்,
டீ.ஓ.எம்.தைக்கா உமர் (கைபேசி எண்: +91 99406 84307) என்பவரின் தந்தையும்,
ஹாஜி கே.எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.என்.முஹம்மத் ஹஸன், ஹாஜி கே.எம்.மஹ்மூத் சுலைமான், ஹாஜி பி.எம்.எச்.முஹம்மத் இக்பால் ஆகியோரின் மச்சானும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் (கைபேசி எண்: +91 95000 35786) தாய்மாமா மற்றும் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
K.M.T.சுலைமான் |