காயல்பட்டினம் கோமான் மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு ஆகிய முத்தெருக்களையும் அணைத்தவாறு அமைந்துள்ளது மொட்டையார் பள்ளி.
இப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், இம்மாதம் 09ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 75 முதல் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது. வெண்கஞ்சி அருகிப் போன இக்காலத்திலும், இப்பள்ளியில் அவ்வப்போது வெண்கஞ்சி தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியில், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்களான ஹாஃபிழ் வி.எஸ்.முஹ்யித்தீன் இமாமாகவும், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த அஹ்மத் சுலைமான் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர்.
ரமழான் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் காழீ அலாவுத்தீன் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.
நடப்பாண்டு ரமழான் மாதத்தில் இஷா தொழுகை 20.30 மணிக்கும், தராவீஹ் தொழுகை 20.45 மணிக்கும் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ரமழான் 27ஆம் நாள் இரவில் தமாம் சாப்பாடு (களறி சாப்பாடு) தயாரிக்கப்பட்டு, ஜமாஅத்தார் அனைவருக்கும் ஸஹர் உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஹாஜி கே.எம்.ஜரூக் பள்ளியின் தலைவராகவும், எம்.ஒய்.காஜா முஹ்யித்தீன் துணைத்தலைவராகவும், ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் செயலாளராகவும், முஹம்மத் காஸிம் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர். எம்.ஒய்.காஜா முஹ்யித்தீன், என்.எம்.முஹம்மத் மீராஸாஹிப் ஆகியோர் தலைமையில், நடப்பாண்டு கஞ்சி கமிட்டி நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இப்பள்ளியின் வெளிப்பகுதி வராந்தாவில், கோமான் ஜமாஅத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைப்பந்து (வாலிபால்) மைதானம் அமைத்து, நாள்தோறும் விளையாடி வருவதும், நகர - வட்டார அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பில் உதவி:
‘பிஸ்மி சைக்கிள்ஸ்’ ஃபாரூக்
கோமான் மொட்டையார் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கோமான் மொட்டையார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கோமான் மொட்டையார் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்திகளைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |