இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள - மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம், கூடுதலாக இடங்கள் ஒதுக்கியுள்ளது. இவ்விடங்கள் - ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இஸ்லாமியர்களின் விகிதாசார அடிப்படையில் பகிர்ந்து கொடுக்கப்படவுள்ளது.
அதன்படி, தமிழகத்திற்கு 38 இடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் (WAITING LIST) 101ம் இடத்தில இருந்து 138ம் இடத்தில உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. மே மாதம் 100 இடங்கள் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
துவக்கமாக தமிழகத்திற்கு 2361 இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 311 இடங்கள், தொடர்ந்து 100 இடங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross