வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆறுமுகநேரி ஐக்கிய உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தலைவர்
கணேஷ்பெருமாள் தலைமையில் உப்பு உற்பத்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்டம், ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில்,
டிசிடபிள்யூ ஆலை நிர்வாகம், கழிவு நீரால் அருகில் 12 கிமீ சுற்றளவு உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்ணின் நிறமே மாறிவிட்டது.
மண்ணின் தன்மை மாறி, உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு்ளளது. உப்பளங்களை நம்பி வாழும் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களின்
வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுகக உத்தரவிட வேண்டும்
என்று தெரிவித்துள்ளனர்.
மனு வழங்கும்போது, மாசுபட்ட உப்பு மற்றும் நீர் மாதிரிகளையும் அவர்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார்
IAS, கூட்டத்தில் கலந்துக்கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அதனை வழங்கி, சோதனை முடிவுகளை தனக்கு
வழங்கும்படி தெரிவித்தார்.
இந்த மனு நேற்று (ஜூலை 14) நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
புகைப்படம்:
THE NEW INDIAN EXPRESS (TIRUNELVELI)
தகவல்:
THE NEW INDIAN EXPRESS (TIRUNELVELI)
மற்றும்
www.tutyonline.com
|