இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் செய்வோர் ஒவ்வொருவரிடம் இருந்து - இந்திய ஹஜ் குழு, பயணம் ஏற்பாடுக்கு செலவாகும் தொகையை உண்மையான செலவு (ACTUAL COST BASIS) அடிப்படையில் மீட்கிறது. இருப்பினும் - விமானம் சேவைக்கான தொகையை 35,000 ரூபாய் என மட்டும் நிர்ணயித்து - பயணியரிடம் இருந்து பெறுகிறது.
இந்தியாவின் 21 நகரங்களில் இருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு விமான நிலையத்தில் இருந்தும் சென்று வர உண்மையில் எவ்வளவு தொகை ஆகிறது என்ற விபரத்தை இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ளது.
உதாரணமாக, சென்னையில் இருந்து சென்று வர - முழு விமான தொகை ரூபாய் 70,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது - 35,000 ரூபாய் மானிய தொகை.
புறப்படும் நகரங்கள் வாரியாக முழு விமான கட்டண தொகை
மஹ்ரம் துணை போன்ற காரணங்களுக்காக மீண்டும் ஹஜ் பயணம் செய்வோர் (REPEATER PILGRIM) இத்தொகையை முழுமையாக செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|