தமது வாடகை வாகனங்களை நிறுத்த இடம் கேட்டு, நகர கார்-வேன் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கார்-வேன் ஓட்டுநர்கள், தமது வாடகை வாகனங்களை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள வளாகத்தில் இதுநாள் வரை நிறுத்தி வந்தனர். வாடகை கார்-வேன் ஓட்டுநர் சங்கமும் அவ்விடத்திலேயே உள்ளது.
காயல்பட்டினம் நகராட்சிக்குச் சொந்தமான இவ்விடம் அண்மையில், அம்மா உணவகம் அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று முடிந்துள்ளது. அம்மா உணவகம் இவ்விடத்தில் அமைக்கப்பட்டுவிட்டால், வாடகை வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லா நிலை ஏற்படும்.
இதனைக் கருத்திற்கொண்டு, இன்று காலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தில், காயல்பட்டினம் நகர வாடகை கார்-வேன் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செ்யயித் அஹ்மத் (சேனாப்பா) தலைமையில், துணைத்தலைவர் அலீ ஹுஸைன், உறுப்பினர்கள் வேம்பு ராஜன், ஸலீம், தயா, பேச்சிமுத்து, அபுல்ஹஸன், எஸ்.எம்.எஸ்.அபுல்ஹஸன், முத்து மகுதூம், வி.எஸ்.எம்.முருகேசன், எஃப்.எஃப்.எஸ்.செய்யித், பி.கே.எஸ்.ஜாஃபர், பக்ஷி குலாம், அஹ்மத் ஷாஹுல் ஹமீத், குழுவாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்துள்ளனர். தமது வாடகை வாகனங்களை நிறுத்த தனி இடவசதி ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் அம்மனுவில் கோரியுள்ளனர்.
தகவல் & படம்:
அஹ்மத் ஷாஹுல் ஹமீத்
(AL BAYYINA CARS)
காயல்பட்டினம் வாடகை வேன் - கார் ஓட்டுநர் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |