பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு ஏற்பாட்டில் மடிக்கணினி (LAPTOP) வழங்கும் நிகழ்ச்சி - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் - ஜூலை 11, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, இப்பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை திருமதி முஹம்மது ஆய்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
130 மாணவர்களுக்கான மடிக்கணினிகளை - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், பள்ளிக்கூட தலைமை ஆசிரியை முஹம்மது ஆய்ஷா, 6வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முஹம்மது மொஹிதீன், 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜே.அந்தோணி, ஹாஜி எஸ்.ஏ.முஸ்தஃபா ஆகியோர் வழங்கினர்.
2011ம் ஆண்டு பதவியேற்ற அ.தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்கு தமிழக அரசு சுமார் 912 கோடி ரூபாய் (9.12 லட்ச கணினிகள்) ஒதுக்கியுள்ளது.
தகவல்:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபித் சேக் உடைய
முகநூல் பக்கம் (https://www.facebook.com/aabidha.shaik)
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 17:02 / 13.07.2014] |