நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இம்மாதம் 19ஆம் நாளன்று நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சி நடத்திட, காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் 29-06-2014 அன்று ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள எமது அலுவலக வளாகத்தில், காலை 11:00 மணிக்கு நடைபெற்றது.
அமைப்பின் நிறுவன உறுப்பினர் எஸ்.எம்.பி.செய்யித் அஹ்மத் அஸ்ஹர் தலைமை தாங்கினார். கிராஅத்துடன் துவங்கிய இக்கூட்டத்தில், மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால செயல்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இஃப்தார் நிகழ்ச்சி:
கடந்த வருடங்களைப் போல, நடப்பாண்டும், எதிர்வரும் 19.07.2014 சனிக்கிழமையன்று இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, காயல் காதர், நாஸர், சிராஜுத்தீன், ஆஸிஃப், செய்யித், ஸஹாபுத்தீன், மொகுதூம் ஆகிய 7 பேர் குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 2 - ஏழைகளுக்கு இலவச அரிசி:
காயல்பட்டினத்திலுள்ள ஏழை எளியோருக்கு ரமழானை முன்னிட்டு இவ்வாண்டு முதல் இலவச அரிசி வழங்க இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், நடப்பாண்டில் 30 நபர்களுக்கு அரிசி வழங்கவும் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - இரத்த தானம் செய்வோரை அதிகரித்தல்:
தற்காலத்தில் இரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால், இரத்த தானம் செய்ய விரும்பும் தன்னார்வலர்களை இனங்கண்டு, அமைப்பின் அங்கத்தினராக்க முயற்சிகளை மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சந்தாதாரர்கள் தமது சந்தா நிலுவைத் தொகைகளை விரைவாக செலுத்திட இக்கூட்டத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.R.ஷேக் முஹம்மத்
துணைத்தலைவர்
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் கடந்த முறை (ஹிஜ்ரீ 1433) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |