| |
செய்தி எண் (ID #) 14091 | | | செவ்வாய், ஜுலை 15, 2014 | காயல்பட்டினம் நகராட்சியில் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்களின் வருகையும், வெளியேற்றமும்! (பாகம் 1) | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2322 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
------------------------------------------
2006 முதல் 2011 வரை பதவியில் இருந்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செயல்பாடுகளில் - அவர்களின் பதவிக்காலம் நிறைவுற்றும் பிரச்சனையாக தொடர்ந்த ஒரு விஷயம் - தற்காலிக அடிப்படையில் செய்யப்பட்ட ஒப்பந்தப்பணியாளர்கள் நியமனம்.
2007 - 2008 காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் - 14 பேர், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். தற்காலிக நோக்கில் நியமனம் செய்யப்பட்ட அவர்களின் பணி காலம், சர்ச்சைக்குரிய சூழலில் ஏறத்தாழ 7 ஆண்டுகள் நீண்டு, அவர்களில் 13 பேரின் பணி நீட்டிப்பு - இறுதியாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட இவர்கள் அனைவரின் நியமனம் ஆரம்பத்தில் இருந்தே, கேள்விக்குரியதாக இருந்து வந்துள்ளது. உள்ளாட்சி நிதி துறை, ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கும் தணிக்கை அறிக்கைகளில், இந்த நியமனங்களுக்கு தணிக்கை தடை விதித்துள்ளது.
2007-2008 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 54)
சுயவ உதவிக்குழு மூலம் துப்புரவு பணி மேற்கொண்டது ...
பொது சுகாதார பணியினை மேற்கொள்ள தனியாரை நியமனம் செய்வதற்கான இயக்குனரின் முன் அனுமதி பெறப்படவில்லை ...
முன் அனுமதி பெறப்படாத நிலையில் இச் செலவீனம் தணிக்கையில் தடை செய்யப்படுகிறது
2007-2008 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 55)
தொழில்நுட்ப உதவியாளர் நியமனம் செய்து ஊதியம் வழங்கியது - உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை ...
2007-2008 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 53)
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் பணி நியமனம் செய்தது. பின்னேற்பு பெறப்படவேண்டும்
இந்த தடை - 2008-2009 ஆண்டுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
2008-2009 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 53)
இந்நகராட்சியில் விலைப்புள்ளி அடிப்படையில் அலுவலக ஈப்பு ஓட்டுனராக நியமனம் செய்யப்பட்ட திரு கே.அஸ்கர் என்பவருக்கு தனிக்கையாண்டில் கீழ்க்கண்ட விபரப்படி தொகுப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பணியிட அனுமதி ஏதும் பெறவில்லை. மேலும் - சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனரின் அனுமதியும் பெறப்படவில்லை...
2008-2009 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 54)
இந்நகராட்சியில் விலைப்புள்ளி அடிப்படையில் அதுப்பரவு வாகன ஓட்டுனராக நியமனம செய்யப்பட்ட திரு G.செல்வக்குமார் என்பவருக்கு தனிக்கையாண்டில் கீழ்க்கண்ட விபரப்படி தொகுப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பணியிட அனுமதி ஏதும் பெறவில்லை. மேலும் - சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனரின் அனுமதியும் பெறப்படவில்லை...
2008-2009 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 57)
இந் நகராட்சியில் ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழுவினை சார்ந்த 11 துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிக்கான கூலி கீழ்க்கண்ட விபரப்படி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பணியிட அனுமதி ஏதும் பெறவில்லை. மேலும் சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனரின் அனுமதியும் பெறப்படவில்லை ...
2008-2009 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 58)
காட்டு தைக்கா தெரு ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழு - ஒப்பந்த அடிப்படையிலான தினக்கூலி பணியாளர்களுக்கு கூலி வழங்கியது - பணிக்கு வராத நாட்களுக்கும் சேர்த்து கூலி வழங்கியது ... குறைபாடு ...
இதே குறைப்பாடுகள் 2009 - 2010 நிதியாண்டின் காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கையில் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. பார்க்கவும் பத்திகள் 30, 32, 33, 34.
2009-2010 நிதியாண்டின் (ஏப்ரல் - டிசம்பர்) காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கை (பத்தி 31)
காட்டு தைக்கா தெரு ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழுவில் இருந்து நியமிக்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தினக்கூலி பணியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக குறிப்பிட்டு தினக்கூலி வழங்கியதாக செலவீனம் மேற்கொண்டது - முறைக்கேடு ...
தணிக்கை அறிக்கைகளில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்ட இந்நியமனங்கள் எவ்வாறு செய்யப்பட்டது என அடுத்து பார்க்கலாம்.
[தொடரும்]
------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|