முதலமைச்சர் கோப்பை போட்டியில் இடம்பெறுவதற்கான - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
முதலமைச்சர் கோப்பை போட்டியில் இடம்பெறுவதற்கான - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி தூத்துக்குடி வ.வு.சி. கல்லூரி மைதானத்தில் இம்மாதம் 01, 02 (செவ்வாய், புதன்) நாட்களில் நடைபெற்றது. இப்போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் விளையாடியது.
தீன் முஹம்மத் (அணித்தலைவர்),
ஸலாஹுத்தீன் (கோல் காப்பாளர்),
ஜாஃபர்,
கிதுரு ஃபைஸல் (துணைத் தலைவர்),
பி.எஸ்.அபூபக்கர்,
மூஸல் காழிம்,
அமானுல்லாஹ்,
அஹ்மத் ஸாஹிப்,
‘மாஷாஅல்லாஹ்’ ஷேக் அப்துல் காதிர்,
வாஸிஃப்,
அமீர்,
பஸ்ஸாம்,
ஃபாஹிம்,
காதர்,
மிஷால்,
ஃபைஸல் அஹ்மத்,
ஷம்சுத்தீன்
ஆகிய 17 வீரர்கள் இவ்வணியில் இடம்பெற்றிருந்தனர். ஹிட்லர் ஸதக், மோகன் ஆகியோர் பயிற்சியாளர்களாகச் சென்றிருந்தனர்.
முதல் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி அணியுடன் மோதி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. ஐக்கிய விளையாட்டு சங்க அணி வீரர் நிஷால் அந்த கோலை அடித்தார்.
காலிறுதிப் போட்டியில் காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. அணியை எதிர்த்தாடி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. அமீர் அந்த கோலை அடித்தார்.
அரையிறுதிப் போட்டியில், தூத்துக்குடி வில்ஸன் ஸ்போர்ட்ஸ் க்ளப் அணியை எதிர்த்தாடி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. ஷேக் அப்துல் காதிர் அந்த கோலை அடித்தார்.
நேற்று (டிசம்பர் 02) மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், தூத்துக்குடி ஸ்ப்ரிட்டெட் யூத் அணியை எதிர்த்தாடி, 1-0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றிபெற்றுள்ளது. அதன் வீரர் அமீர் அந்த கோலை அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், அடுத்து நடைபெறவுள்ள - முதலமைச்சர் கோப்பைக்கான மதுரை தென் மண்டல அளவிலான போட்டியில் விளையாடும் தூத்துக்குடி மாவட்ட அணியில், ஐக்கிய விளையாட்டு சங்க அணியின்
ஸலாஹுத்தீன்,
ஜாஃபர்,
தீன் முஹம்மத்,
அமீர்,
கிதுரு ஃபைஸல்
ஆகிய 5 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தகவல்:
‘ஸிலோன் ஹவுஸ்’ ஸலாஹுத்தீன்
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |