தென்பொதிகையில் உற்பத்தியாகும் தாமிரவருணி ஆறு ஆத்தூரையடுத்து பல பிரிவுகளாகப் பாய்ந்தோடுகிறது. பழைய காயலில் துவங்கி, காயல்பட்டினம் கடையக்குடி அருகில் வரை கடலோரத்தில் விரிந்து பரந்து வழிந்தோடுகிறது தாமிரவருணி. இவற்றுக்கிடையே சுமார் 30க்கும் மேற்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் புன்னைக்காயல் கிராமம்.
இங்கு, தாமிரவருணி ஆறு கடலுடன் கலக்கும் சங்குமுகம் பகுதியைக் காண, காயல்பட்டினத்தைச் சேர்ந்த கராத்தே சாகச வீரரும் - சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான ஜாஹிர் ஹுஸைன், தன் குடும்பத்தினருடன் சிற்றுலா சென்றபோது, கடல்வாழ் அபூர்வ உயிரினமான கடல் பசு ஒன்று இறந்து, கரையொதுங்கிக் கிடந்ததை அவர்கள் வியப்புடன் கண்ணுற்றுள்ளனர். கரையொதுங்கிய கடல் பசுவின் படக்காட்சிகள்:-
தகவல் & படம்:
ச.பார்த்திபன் |