தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஆகியவற்றின் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத் திறப்பு விழா, 15.11.2014 சனிக்கிழமையன்று, கூலக்கடை பஜாரில், மாவட்ட தலைவர் ஆஸாத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் மவ்லவீ ஜெ.எஸ்.ரிஃபாய் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்ததோடு, அதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் அஞ்சலகம் அருகாமை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
தகவல்:
முஹ்ஸின் முர்ஷித்
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |