அண்மையில் வரலாறு காணாத வெள்ளத்தால் காஷ்மீர் நிலைகுலைந்து போனது. இதனை நேரில் பார்வையிட்டு தேசிய பேரழிவு என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவும் என அறிவித்ததோடு நாட்டு மக்களும் உதவ வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரூபாய் 25 லட்சம் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி இன்று பிரதமர் நநேரந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹ்மத் எம்.பி., தேசிய செயலாளரும், கேரள முன்னாள் அமைச்சருமான இ.டி.முஹம்மத் பஷீர் எம்.பி., ஆகியோர் வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த உதவிக்காக பிரதமர் பாராட்டியதோடு, பிரதமரின் நிவாரண நிதிக்கு மற்றவர்களும் தாராளமாக உதவ வேண்டும் என்றார்.
காஷ்மீர் வெள்ள நிவாரணத்தை, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், நிவாரண உதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்போதும் தயாராக இருக்கும் என்றும் இ.அஹ்மத் எம்.பி., குறிப்பிட்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |