தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த அவர் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனிப்பார்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரிய தலைவராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளரக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத், அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக இருந்துவந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்., பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலராக இருந்த என்.எஸ்.பழனியப்பன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர்ப்புற திட்ட துறை ஆணையர் ஆர்.வெங்கடேசன், வருவாய்த்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலராக இருந்த நசீமுதீன், உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மோகன் பியாரே ஐ.ஏ.எஸ்., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சி.மனோகரன் ஐ.ஏ.எஸ். வேளாண் தொழில் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ்., தமிழக கடல்சார் வாரியம் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறு தொழில் கூட்டமைப்பு, டான்சி தலைவராக நிர்மலா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல்:
தி இந்து |