அனுமதிக்கப்படாத மனைப் பிரிவுகளை (Unapproved Layout) வரைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதோடு, 2018 மே மாதம் வரை காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து – பொதுமக்கள் நலன் கருதி காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) - வரன்முறைப்படுத்துவது (REGULARISATION) குறித்து தமிழக அரசு, மே மாதம் வெளியிட்ட அறிவிப்பு தற்போது மாற்றப்பட்டு - புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
முழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் கீழே வழங்கப்படுகின்றன:
(1) ஒரு மனைப்பிரிவில் (LAY OUT) - குறைந்தது ஒரு மனை (PLOT) - 20-10-2016 தேதிக்கு முன்னர் விற்கப்பட்டிருந்தால், தற்போது அரசு அறிவித்துள்ள - முறைப்படுத்தும் திட்டத்தை (REGULARISATION SCHEME) பயன்படுத்தலாம்
(2) இந்த திட்டப்படி முறைப்படுத்த கால அவகாசம், மே 3, 2018 வரை நீட்டிக்கப்படுகிறது (LAST DATE)
(3) முறைப்படுத்த விண்ணப்பிக்கப்படும் மனைப்பிரிவின் சாலை அளவு (ROAD WIDTH) - "உள்ளது உள்ளபடி" ("as is basis") முறைப்படுத்தப்படும்
(4) இந்த திட்டப்படி, தங்கள் மனையை முறைப்படுத்த விண்ணப்பம் செய்யும் - தனி நபர்கள், Open Space Reserve (OSR) விதிகளில் இருந்து முழு விலக்கு பெறுகிறார்கள்
(5) 20-10-2016 தேதிக்கு முன்னர் குறைந்தது ஒரு மனை விற்கப்பட்ட மனைப்பிரிவுகளில், எஞ்சிய மனைகளை முறைப்படுத்த விண்ணப்பம் செய்யும் மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் (PROMOTERS), விற்கப்படாத மனைப்பிரிவில் 10 சதவீதம் இடத்தை, உள்ளாட்சி மன்றங்களுக்கு, OSR வகைக்காக தானமாக வழங்கவேண்டும். இவ்வாறு தானமாக வழங்கப்படும் இடத்தின் பரப்பளவு குறித்த விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.
(6) சென்னையில் 5.8.1975 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும், சென்னைக்கு வெளியே ஊரக பகுதிகளில் 29.11.1972 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும், சென்னைக்கு வெளியே நகர பகுதிகளில் 1.1.1980 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும் - அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும் (DEEMED APPROVED)
(7) மனைகளை முறைப்படுத்த விண்ணப்பம் செய்வோர் - மனை ஒன்றுக்கு, 500 ரூபாய் - கூர்ந்தாய்வுக்கட்டணமாக (SCRUTINY FEE) செலுத்தவேண்டும். மேலும் - வளர்ச்சிக்கட்டணம் (DEVELOPMENT FEE) மற்றும் வரன்முறைக்கட்டணமாக (REGULARISATION FEE) -
/// மாநகராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 600 என்றும்,
/// சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 310 என்றும்,
/// நிலை 1 மற்றும் நிலை 2 நகராட்சியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 210 என்றும்,
/// பேரூராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 105 என்றும்,
/// கிராம ஊராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 55 என்றும்,
புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியாகும்.
ஒரு சதுர மீட்டர் என்பது சுமார் 10.76 சதுர அடி ஆகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 14, 2017; 12:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|