சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 123-வது செயற்குழு கூட்டம் பாளையம் செய்யித் முஹ்யித்தீன் அவர்கள் இல்லத்தில் வைத்து சென்ற 15/11/2019 வெள்ளி மாலை 06:30 மணிக்கு நடந்தேறியது.
இச்செயற்குழுவிற்கு மன்றத்தின் துணை தலைவர் சகோ.கிஜார் சலாஹுதீன் தலைமை ஏற்றார். சகோ.அப்துல் பாசித் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். சகோ.செய்யிது முஹம்மது சாஹிப் வரவேற்புரை நல்கினார்.
மன்ற செயல்பாடுகள்:
சென்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதன் நிமித்தம் நடந்தேறிய பணிகள், தற்போதைய மன்ற செயல்பாடுகள், இன்றைய கூட்டப்பொருள் குறித்த விபரங்கள் மற்றும் நகர் சார்ந்த ஏனைய செய்திகளையும் விரிவாக எடுத்துரைத்தார் மன்றச்செயலர் சகோ.எம்.டபிள்யு.ஹாமீது ரிஃபாய்.
நிதிநிலை:
மன்றத்தின் பொது இருப்பு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் பற்றிய நிதி விபரங்களை சமர்ப்பித்தார் மன்றத்தின் துணைப்பொருளாளர் சகோ.முஹம்மத் முஹ்யித்தீன்.
“இக்ரஃ” முன்னெடுத்து வரும் TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தீவுத் தெருவில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வந்த கோரிக்கை மனு பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார் நம் மன்றத்தின் இக்ரஃ பொறுப்பாளர் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ்.
K.M.T மருத்துவமனையில் அமையவுள்ள DIALYSIS CENTER – வகைக்காகவும் மேலும் நமதூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நலத்திட்ட பணிகளுக்காகவும் ஷிஃபா அமைப்பின் மூலம் நம் மன்றத்தின் பங்களிப்பை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை:
பயனாளிகளிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட கல்வி மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு B.Tech., Radiology, Nursing, Hotel Management, மற்றும் B.Pharm. படிப்பிற்காக ஆறு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
நன்றியுரை:
இக்கூட்டம் இனிதே நிறைவுற அருள்புரிந்த வல்ல இறைவனுக்கு முதலில் நன்றியை உரித்தாக்கி, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கூட்ட அனுசரணையாளருக்கும் நன்றி கூறினார் சகோ.ஷேக் அப்துல்லாஹ் .
சகோ.சட்னி முஹம்மது லெப்பை அவர்களின் இறைவேண்டலுக்குப் பின் கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது...... அல்ஹம்து லில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
செய்திப் பிரிவு,
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
15.11.2019.
|