காயல்பட்டினத்தில் இம்மாதம் 18ஆம் நாளன்று குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், இணையவழியிலேயே பெயர் பதிவு செய்யலாம் என்றும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஏப்ரல் 2017 முதல் காயல்பட்டினம் நகரில் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? குழுமம் - அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து - குருதிக்கொடை முகாம்களை நடத்திவருகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள 9 முகாம்கள் மூலம், தூத்துக்குடி அரசு ரத்த வங்கி மற்றும் திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி ஆகியவற்றுக்கு - சுமார் 750 பேர் குருதிக்கொடை செய்துள்ளார்கள்; இதில் சுமார் 130 பெண்களும் அடங்கும். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
எதிர்வரும் ஜனவரி 18, 2020 அன்று (சனிக்கிழைமை), காயல்பட்டினம் KMT மருத்துவமனை வளாகத்தில் - 10 வது குருதிக்கொடை முகாம் (BLOOD DONATION CAMP) - தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து - இறைவன் நாடினால் - நடத்தப்படுகிறது.
காலை 9:30 மணி முதல் மாலை 3:30 வரை நடத்தப்படவுள்ள இம்முகாமில் - 18 வயது பூர்த்தி செய்து, 60 வயதை தாண்டாத ஆண்கள் - பெண்கள் கலந்துக்கொள்ளலாம்.
குருதிக்கொடை செய்ய விரும்புவோர் இணையவழியாக - கீழ்காணும் முகவரி மூலம் - முன்பதிவு செய்யலாம்:
https://forms.gle/LURZ4P5bRcD62HBj9
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|