காயல்பட்டினம் நகருக்கென தனி இலச்சினையை உருவாக்க, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்குப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட நகரம் காயல்பட்டினம். சங்க காலத்தில் இருந்து வணிகத்திற்கு இப்பகுதி பெயர் பெற்றதாகும்.
நான்கு திசைகளில் இருந்தும் காயல் நோக்கி - கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் பலர் வந்துள்ளனர்; வணிகம் புரிந்துள்ளனர்; இம்மண்ணிற்கு புகழ் சேர்த்துள்ளனர்.
மேலும் - ஹிந்து, கிறிஸ்துவர், முஸ்லீம் என அனைத்து சமுதாய மக்களும், ஒற்றுமையாக வாழும் பூமி இதுவாகும்.
இந்த பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், உலகில் பல முக்கிய நகரங்களுக்கு உள்ளது போல் - காயல்பட்டினம் நகருக்கும் பிரத்தியேக இலச்சினை (KAYAL CITY LOGO) வடிவமைக்கலாம் என மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - திட்டமிட்டுள்ளது.
எவ்வாறு அந்த இலச்சினை இருக்கலாம் என்பதனை தெரிவிக்க - உலகின் பிற நகரங்களின், பிரபல இலச்சினைகள் இணைக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் நகருக்கு என இலச்சினை உருவாக்குபவர்கள் கீழ்க்காணும் விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும்:
// இந்நகரின் வணிக வரலாறு
// அனைத்து சமுதாய மக்களுடன் ஒற்றுமையாக வாழந்துவரும் வரலாறு
// மொழிப்பற்று
// முன்னோக்கு பார்வை
[[[[ சிறந்த இலச்சினைக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் ]]]]
தேர்வு செய்யப்படும் இலச்சினையை - காப்புரிமை எதுவுமின்றி (COMMONS COPYRIGHT) - அனைவரும் இலவசமாக பயன்படுத்தும் உரிமத்தையும், போட்டியில் கலந்துக்கொள்வோர் வழங்கவேண்டும்.
இலச்சினைகள் - ஜனவரி 31 வரை - mega@kayal.org என்ற ஈமெயில் முகவரி மூலம் மட்டும் வரவேற்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|