காயல்பட்டினம் கோமான் தெரு, குத்துக்கல் தெரு ஆகிய பகுதிகளில் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருமாறு மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் மின் வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பகுதியில் கோமான் மொட்டையர் பள்ளி அருகில் உள்ள மின்மாற்றி (TRANSFORMER) - பல மாதங்களாக ஆபத்தான நிலையில் உள்ளதாக - மின்வாரியத்திடம் கடந்த ஆண்டே - புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இவ்வாண்டு மீண்டும் நினைவூட்டல் செய்யப்பட்டது.
உடனடியாக மின்மாற்றி மாற்றப்படும் என உறுதியளித்து ஏறத்தாழ நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் - குறைந்த அழுத்த மின் விநியோகம் இருப்பதால், அவ்விடத்தில் மின்மாற்றி நிறுவிட கோரி - கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆய்வு செய்து இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாக கூறி பல மாதங்கள் ஆகியும், இதுவரையில் மின்மாற்றி நிறுவப்படவில்லை.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இவ்விரு பணிகளையும் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்றிட கோரி - திருச்செந்தூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை செயற்பொறியாளர் அவர்களிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|