தூத்துக்குடி - கொழும்பு மார்க்கத்தில் பயணியர் கப்பல் சேவை திங்கள் (ஜூன் 13) முதல் இயக்கப்பட உள்ளது. கப்பலில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் கவனத்திற்கு சில முக்கிய விஷயங்கள்:-
--- சுற்றுலா நோக்கில் இலங்கை செல்லும் இந்தியர்களுக்கு விசா - இலங்கை துறைமுகத்திலேயே வழங்கப்படும். இலவசமாக வழங்கப்படும் இவ்விசாக்கள் 30 நாட்கள் வரை செல்லத்தக்கது
--- பயணியர் - தாங்கள் நாடு திரும்புவதற்காக வாங்கியுள்ள டிக்கெட்டினை காண்பிக்க வேண்டும். மேலும் இலங்கையில் இருக்கும் போது செலவாகும் தொகைக்கான நிதி ஆதாரத்தையும் காண்பிக்கவேண்டும்
--- சுற்றுலா தவிர பிற காரணங்களுக்கு பயணம் செய்வோர் - அதற்கான விசாவினை முற்க்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்
--- விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்தப்பின்னர், அவசியம் எனில், மேலும் இரு மாதங்களுக்கு விசாவினை நீட்டித்து கொள்ளலாம்
--- சிறுவர்கள் தனியாக பயணம் செய்ய அனுமதி கிடையாது
--- பாஸ்போர்ட் - குறைந்தது 6 மாதத்திற்கு காலவிதியாக கூடாது
--- டிக்கெட் கட்டணம் - ஒரு வரவேற்பு குளிர்பானம் (Welcome Drink) மற்றும் வரையறுக்கப்பட்ட உணவு (Fixed Menu) - உள்ளடக்கியது
--- பயணியர் - பயண நேரத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரம் முன்னர் துறைமுகத்திற்கு வரவேண்டும்
--- சிறப்பு வசதி தேவையுள்ளோர் (வயதானவர், உடல் ஊனமுற்றோர் ...) தங்கள் தேவையை டிக்கெட் முன்பதிவின்போதே தெரிவிக்கவேண்டும்
--- குறைந்த கட்டண பிரிவு (Economy) பயணியர் ஒவ்வொருவருக்கும் 100 கிலோ கிராம் வரையிலும், டீலக்ஸ் மற்றும் முதல் வகுப்பு பயணியருக்கு 200 கிலோ கிராம் வரையிலும் அனுமதி வழங்கப்படும்
--- கையில் எடுத்து செல்ல இரு பைகள் - இரண்டும் சேர்த்து, 15 கிலோ கிராம் மிகாது அனுமதிக்கப்படும்
--- கப்பல் புறப்படுவதற்கு முன் நான்கு மணி நேரத்திற்கு முன்னர் வரை முன்பதிவினை ரத்து செய்யலாம். அதற்கான கட்டணம் கழிக்கப்படும்
பாகம்: 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7
[முற்றும்]
|