தூத்துக்குடி - கொழும்பு மார்க்கத்தில் பயணியர் கப்பல் சேவை திங்கள் (ஜூன் 13) முதல் இயக்கப்பட உள்ளது.
இம்மார்க்கத்தில் இயக்கப்பட உள்ள M/v Scotia Prince என்ற கப்பல் 143 மீட்டர் நீளமும், 12.7 மீட்டர் அகலமும் கொண்டது. பஹாமஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலை அமெரிக்காவில் உள்ள International Shipping Partners நிறுவனம் பராமரித்து வருகிறது. கப்பலின் உரிமையாளர் நிறுவனம் Scotia Cruise Owner Limited ஆகும்.
Scotia Prince என்று தற்போது அழைக்கப்படும் இக்கப்பல் முன்னர் Stena Olympica என்ற பெயரில் அழைக்கப்பட்டது. Titovo Brodogradiliste (Yugoslavia) என்ற நிறுவனத்தால் இக்கப்பல் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1972 ஆம் ஆண்டு முதல் பயணியர் போக்குவரத்துக்காக இயக்கப்பட்டு வருகிறது. 1986 ஆம் ஆண்டும், 1997 ஆம் ஆண்டும், 2002 ஆம் ஆண்டும் இக்கப்பல் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.
ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ பகுதிகளில் இயக்கப்பட்ட இக்கப்பலை - 14 மாத ஒப்பந்த அடிப்படையில் Flemingo International என்ற இந்திய நிறுவனம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பெற்றது. 14 மாத ஒப்பந்தம் நீட்டிக்கதக்கது. தூத்துக்குடி - கொழும்பு மார்க்கத்தில் 10 ஆண்டுகள் கப்பல்களை இயக்க Flemingo International நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சேவையை Flemingo International நிறுவனம் - Tradex Shipping என்ற மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இயக்க உள்ளது.
ஒன்பது அடுக்குகள் கொண்ட இக்கப்பலின் முழு வடிவினை காண இங்கு அழுத்தவும்.
பாகம்: 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7
[தொடரும்] |