தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதன் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு:-
Ø காயல்பட்டினம் இரண்டாவது பைப் லைன் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றல்...
Ø கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை மக்களுக்கு அதிகளவில் இட ஒதுக்கீடு செய்தல்...
Ø கடலில் வீணாகக் கலக்கும் தாமிரபரணி ஆற்று நீரை வறட்சிப்பகுதிகளுக்கு மாற்றியனுப்ப ஆவன செய்தல்...
Ø நதி நீரை உறிஞ்சி நாசப்படுத்தும் தண்ணீர்த்தாமரை, அமலைச் செடிகள் உள்ளிட்டவற்றை அகற்றல்...
Ø நதி நீர் சேமிப்பு...
Ø தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாட்டை செயல்படுத்தல்...
Ø மின் பற்றாக்குறையைப் போக்கிட சூரிய ஒளி, குப்பைகள் உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் தயாரித்தல்...
Ø தனியார் நிறுவனங்களுக்கிணையாக அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தல்...
உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அண்மையில் அ.தி.மு.க. கட்சியின் புதிய ஆட்சி தமிழகத்தில் அமையப்பெற்றதற்கு அக்கடிதத்தில் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |