வள்ளல் சீதக்காதி நினைவு மின்னொளி கைப்பந்துப் போட்டி காயல்பட்டினம் தாயிம்பள்ளி எதிரிலுள்ள சீதக்காதி நினைவு நூலக மைதானத்தில் 11.06.2011 அன்று துவங்கியது.
டார்க் ஈகிள்ஸ் அணியினரால் நடத்தப்பட்ட இப்போட்டித் தொடரில், காயல்பட்டினத்தைச் சார்ந்த சி-யுனைட்டெட், கே.எஸ்.ஸி. (கே-யுனைட்டெட்), ஒய்.யு.எஃப்., டார்க் ஈகிள்ஸ்-ஏ, டார்க் ஈகில்ஸ்-பி, காலரி பேர்ட்ஸ், கொம்புத்துறை ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில், கே-யுனைட்டெட் அணியும், காலரி பேர்ட்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன.
நேற்றிரவு 08.00 மணிக்கு இறுதிப்போட்டி துவங்கியது. 5 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் காலரி பேர்ட்ஸ் அணி, கே-யுனைட்டெட் அணியை 3-2 என்ற கணக்கில் வென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணியினருக்கு, தாயிம்பள்ளி நிர்வாகி ஹாஜி கே.எம்.தவ்லத், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ஹாஜி எல்.டி.சித்தீக் ஆகியோர் பணப்பரிசுகளை வழங்கினர்.
இறுதிப்போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முஹம்மத் லெப்பைக்கு சீதக்காதி நினைவு நூலக நிர்வாகி ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா பரிசு வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில் காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத் அங்கத்தினர் மற்றும் நகரின் கைப்பந்து ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
போட்டி ஏற்பாட்டுக் குழு சார்பில்,
M.A.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
S.R.B.ஜஹாங்கீர்,
அல்தாஃப் எண்டர்ப்ரைசஸ்,
தைக்கா பஜார், காயல்பட்டினம். |