காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.
எட்டாம் நாளான நேற்று, (11.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்கினார்.
வியாபாரத்தில் அனுமதிக்கப்பட்ட - அனுமதிக்கப்படாத நடைமுறைகள், வட்டி, கொடுக்கல் - வாங்கலிலுள்ள ஒழுங்கு முறைகள், தவணை முறை வியாபாரம், நாணய மாற்று - பண்ட மாற்று வணிகம், அடமானம், கடன் வழங்கல் - பெறல், ஏலம், பங்கு வணிகம் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் ஃபாழில் பாக்கவீ அஹ்ஸனீ வழங்குகிறார்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
|