தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று பதில் அளித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இந்தத் திட்டடத்தின் கீழ் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரம் டிவி பெட்டிகள் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
1. கருணாநிதி குடும்பம் பெற்றது 20 ஆயிரம் கோடி ..!! posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[11 June 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5170
கடந்த ஐந்து ஆண்டுகளில், கலர் "டிவி' வழங்க, 3,687 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில், 3,687 கோடி செலவழித்து, ஆண்டுக்கு 4,000 கோடி தனது குடும்பம் பெற கருணாநிதி வழி செய்துவிட்டார். ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் அந்த குடும்பம் பெற்றது 20 ஆயிரம் கோடி ரூபாய். எனவே, கலர் "டிவி' வழங்கும் திட்டம், சொந்த நலனுக்காக தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என ஆணித்தரமாக அம்மையார் கூறியுள்ளாறே....
2. புரட்சி வெடிக்க வேண்டும் posted byMUTHU ISMAIL (KAYALPATNAM)[11 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5172
நண்பர் முத்துவாப்பா அவர்கள் சொல்வது சரிதான் - இலவச கலர் டிவி திட்டத்தால் கருணாநிதி குடும்பம்தான் லாபம் சம்பாதித்தது அது உண்மை தான்... அடுத்ததாக இப்போ இந்த ஜெயா அம்மையாரும் + அந்த கருப்பு எம்ஜியார் விஜயகாந்தும் என்ன... என்ன.. செய்ய போறாங்க!! பொறுத்து இருந்து பார்போம்? தமிழ் நாட்டு மக்களின் நம் தலையெழுத்து...! என்ன செய்ய... நடிகர்களின் கையில் நம் நாடு உள்ளது.. மக்கள் மத்தியில் போராட்டம், எழுச்சி, புரட்சி வெடிக்க வேண்டும்... அப்போதுதான் ஒரு மாற்றம் வரும்... அது வரை நம் நாட்டுக்கு விடிவு காலம் இல்லை...
3. TIT FOR TAT posted bys.e.m abdul cader (bahrain)[11 June 2011] IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 5177
DEAR BROTHERS ,NOTHING MORE WILL HAPPAN IN TAMIL NADU'S POLITICALS EXCEPT " TIT FOT TAT " OR "REVANGE" THAT'S ALL .IT IS BETTER TO DO OUR WORK LEAVING THIS USELESS POLITICIANS / POLITICALS.THEY ARE ALL SELFISH AS WELL AS "LOG IN SMALL PONDS.
5. கலர் டிவியும் கலெக்'சன்' குடும்பமும்! posted bySalai.Mohamed Mohideen (USA)[11 June 2011] IP: 72.*.*.* United States | Comment Reference Number: 5179
தி. மு.க வின் தேர்தல் அறிக்கை படி டி.வி இல்லாதவங்களுக்கு மட்டும் டி.வி கொடுத்து இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் அல்லவா வாரி இறைத்தார்கள். பணக்காரர்கள் கூட இந்த டி.வி க்கு ஆளா பரந்தார்களே. கடைசியில் என்ன ஆச்சு..ஏற்கனவே டி.வி வைத்து இருந்தவர்கள் வீட்டில் கருணாநிதியின் படம் பொருந்திய டி.வி, கையில் ஒன்றும் காலில் ஒன்றுமாக கிடந்தது, பின் ஸ்டோர் ரூமில் உறங்கி கடைசியில் குப்பைக்கு/உடைந்து போனது தான் மிச்சம். இது எல்லாம் மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சவும், இலவசமாக கொடுப்பது போல் கொடுத்து கேபிள் கனெக்சன் என்ற பெயரில் ஏழைகளின் பணத்தை உறிஞ்சுவதற்கு போட பட்ட சுயநலவாதிகளின் சதி திட்டம்.
எந்த ஒரு அத்தியாவசயமான இலவசமும் உண்மையிலேயே தேவை உள்ளவர்களை மட்டும் சென்று அடையும்போதுதான் அது உண்மையான இலவசமாகிறது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross