இவ்வருடம் இந்திய ஹஜ் குழு மூலம் - ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள், தங்கள் பாஸ்போர்டை சமர்பிக்க ஜூன் 15 இறுதி நாளாகும். இருப்பினும், பயணம் செய்ய தேர்வாகி உள்ள சிலர், தங்கள் பாஸ்போர்டை சமர்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டு இந்திய ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இவ்வருடம் இந்திய ஹஜ் குழு மூலம், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் காலதாமதமாக தங்கள் பாஸ்போர்டை சமர்பிக்க - போதிய ஆதாரங்களையும், உரித்த காரணங்களையும், மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவிடம் ஜூன் 15 க்குள் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால், அவர்கள் பயணம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|