அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளின்படி, மாநில மற்றும் காயல்பட்டினம் நகரளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும்,
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், கடந்த 28.05.2011 அன்று நடத்தப்பட்ட பொதுக்குழுவில், அதன் புதிய தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் உள்ளிட்ட புதிய நிர்வாகக் குழுவிற்கும் பெங்களூரு காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் அப்துர்ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடைபெற்று முடிந்துள்ள பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வில் நகரளவில்
முதலிடம் பெற்ற காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி ஆயிஷா ஷரஃபிய்யா,
இரண்டாமிடம் பெற்ற அதே பள்ளியின் மாணவியரான சித்தி கதீஜா, சாமு சமீரா
மற்றும்
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஷஃபீக்குர்ரஹ்மான்,
மூன்றாமிடம் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஸல்மா ஸியானா
மற்றும் எல்.கே.மேனிலைபள்ளி மாணவர் சுப்பையா என்ற கண்ணன்
ஆகியோரையும்,
மெட்ரிகுலேஷன் பிரிவில் நகரளவில்
முதலிடம் பெற்ற காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி,
இரண்டாமிடம் பெற்ற அதே பள்ளியின் மாணவி முஜாஹிதா,
மூன்றாமிடம் பெற்ற சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ரிஸ்விய்யா ஆகியோரையும்,
மெட்ரிகுலேஷன் தேர்வில் அரபி மொழி பாடத்தில் மாநில அளவில்
இரண்டாமிடம் பெற்ற சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ஆயிஷா முஸ்ஃபிரா,
மூன்றாமிடம் பெற்ற முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி செய்யித் ஹலீமா ஆகியோரையும் எம் மன்றம் மனதாரப் பாராட்டுகிறது.
வரும் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் காயல்பட்டினம் பள்ளிகளைச் சார்ந்த மாணவ-மாணவியர் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்றிட எம் மன்றம் வாழ்த்துகிறது.
அதுபோல, கடந்த 28.05.2011 அன்று நடைபெற்ற இக்ராஃ கல்விச்சங்க பொதுக்குழுவில் சங்கத்தின் தலைவராக தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஜனாப் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதர்க்கும் மற்றும் அச்சங்கத்தின் நிர்வாக குழுவில் உள்ள வெற்றிடங்களுக்கும , புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும் எமது பெங்களூரு காயல் நல மன்றம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
இவர்களின் ஆற்றல் மிக்க நிர்வாகத்தின் கீழான இக்ராஃவின் செயல்பாடுகளுக்கு எம் மன்றம் என்றும் ஒத்துழைப்பாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம், இன்ஷா அல்லாஹ்!
இந்நேரத்தில், இதுவரை இக்ராஃவின் தலைவராகப் பணியாற்றிய ஹாஜி பாளையம் முஹம்மத் ஹசன் அவர்களின் மகத்தான சேவைக்கு வல்ல அல்லாஹ் நிறைவான நற்கூலிகளை வழங்கியருள்வானாக என்று வல்லோனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |