காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை சந்திப்பின் வடமுனையில் அமைந்துள்ளது மஹான் ஜாஃபர் ஸாதிக் வலிய்யுல்லாஹ் தர்ஹா.
இங்கு, வழமை போல இவ்வாண்டும் கந்தூரி நிகழ்ச்சிகள் இம்மாதம் 02ஆம் தேதி நடைபெற்றன. அன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. மாலையில், அம்பலம் ஸாலிஹ் தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின், பண்ணை ஸலாஹுத்தீன் தலைமையில், ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாமும் - ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித உரை நிகழ்த்தினார்.
துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சிகளில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் |