தமிழகத்தில் கோயமுத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு, மத்திய ரிசர்வ் காவல்துறையின் கலவர தடுப்பு அதிவிரைவுப் படை செயல்பட்டு வருகிறது.
சாதி - மதக் கலவரங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சியாக – தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதம் நோக்குடன், இந்த காவல்துறை பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் அண்மைக்கால சாதி மோதல்கள் தொடர்பான பதட்டத்தைத் தணிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் இக்காவல்துறை பிரிவின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்து வருகிறது.
அதனடிப்படையில், இம்மாதம் 12ஆம் நாள் வியாழக்கிழமையன்று (நேற்று), திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில்ஈ அதிவிரைவுப் படை துணை கமாண்டர் சுனில் குமார், உதவி கமாண்டர் ராமதாஸ் ஆகியோர் வழிநடத்தலில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. காயல்பட்டினத்தில், நேற்று காலை 10.00 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி புறநகர் காவல்துறை தனிப்பிரிவு துணை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், ஆய்வாளர்களான - ஆத்தூர் சோமசுந்தரம், ஆறுமுகநேரி முத்து சுப்பிரமணியன், துணை ஆய்வாளர்களான சபீதா, அமுதசேகரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.
படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |