சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நலத் திட்டங்களுள் ஒன்றான காயல்பட்டினத்தைச் சேர்ந்த - ஆதரவற்ற - ஏழை எளிய மக்களுக்கு “அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்ட”த்தின் கீழ், 72 பயனாளிகளுக்கு - தலா ரூபாய் 1,377 என்ற விகிதத்தில், ரூபாய் 99 ஆயிரத்து 144 செலவில் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டு வருகிறது. சமையல் பொருட்கள் விபரப் பட்டியலும், பொருட்களின் காட்சிகளும் வருமாறு:-
மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து, பொருட்களை பயனாளிகள் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வினியோகித்து வருகின்றனர்.
மன்றத்தின் மார்ச் மாத செயற்குழுக் கூட்டத்தில், பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மொத்தம் 72 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் “அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்ட”த்தின் கீழ், இதற்கு முன் பயனாளிகளுக்கு சமையல் பொருட்கள் வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 20:52 / 16.03.2014] |