பிளஸ் 2 தேர்வு நடக்கும் 1850 தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் உள்ளிட்ட எழுதுபொருட்களை அனுப்பும் பணியை தேர்வுத் துறை தொடங்கியது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிகின்றன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 30 ஆயிரம் மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டு 1800 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 50 தேர்வு மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த ஆண்டு தமிழ கம் முழுவதும் 1850 தேர்வு மையங்கள் செயல்படும். சென்னையில் 140 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் அரசுப்பள்ளிகள் 21, மாநகராட்சி பள்ளிகள் 27, ஆதிதிராவிட நலப்பள்ளிகள் 2, நிதியுதவி பெறும் பள்ளிகள் 97, தனியார் பள்ளிகள் 41, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 201, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 16 உள்ளன.
மேற்கண்ட தேர்வு மையங்களுக்கு தேவை யான எழுது பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடு களை தேர்வுத் துறை தற் போது தொடங்கியுள்ளது.
சென்னையில் டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் துறையில் இருந்து 7 மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு இந்த எழுது பொருட்களை அனுப்புவார்கள். அந்தந்த தேர்வு மையங்களுக்கு ஏற்ற எழுது பொருட்களை மண்டல துணை இயக்குனர்கள் அனுப்பி வைப்பார்கள்.
மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் இருந்து அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களுக்குரிய எழுது பொருட்களை தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பெற்றுச் செல்ல வேண்டும். தனியார் பள்ளிகளில் அமையும் தேர்வு மையங்களுக்கான எழுது பொருட்களை அந்த பள்ளிகளே வாகனங்களை அனுப்பி பெற்றுச் செல்ல வேண்டும். இது குறித்து அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு துறை மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் எழுது பொருட் கள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சப்ளை செய்யப்படும். அரசு பள்ளிகளில் தேர்வு மையம் அமையப் பெற்றவர்கள் வாகனங்கள் ஏதும் இல்லாமல் வந்திருந்தனர். சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கான எழுது பொருட்கள் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எழுது பொருட்கள் தேர்வு மையங்களுக்கும் சென்று சேர்ந்ததுதம், தேர்வு நடத்துவதில் தடை இருக்காது என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தகவல்:
தினகரன் |