காயல்பட்டினத்தில் நகர்நலப் பணிகளை - யாரையும் எதிர்பாராமல் களமிறங்கிச் செய்யும் முனைப்புடன் SAFE HANDS WELFARE ASSOCIATION என்ற பெயரில் இளைஞர்களைக் கொண்ட அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்த்தல், சுகாதார மேம்பாடு, பொதுவிடங்களில் தூய்மைப் பணிகள், நகர்நலப் பணிகளாற்றும் அமைப்புகளுக்கு உறுதுணை செய்தல் உள்ளிட்ட நல்லெண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு SAFE HANDS WELFARE ASSOCIATION என்ற பெயரில் இளைஞர் சேவை அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
துவக்கக் கூட்டம் 16.01.2011 அன்று இரவு 09.00 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது. ஆசிரியர் அப்துல் ரஸாக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, நகர்நலப் பணிகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்து விரிவான அறிவுரைகளை வழங்கினார்.
தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் பேணிக்கொள்ள வேண்டும்... அவ்வாறு செய்தால் மட்டுமே பொதுமக்களின் பேராதரவுடன் நகர்நலப் பணிகளைத் தொடர்ந்தாற்ற இயலும்... என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், அமைப்பின் நிர்வாகக் குழு பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது:-
அமைப்பாளர்:
எச்.எல்.அப்துல் பாஸித்
தலைவர்:
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்
துணைத் தலைவர்:
அப்துல் அஜீஸ்
செயலாளர்:
எஸ்.ஓ.கே.முஹம்மத் ஹஸன்
துணைச் செயலாளர்கள்:
(1) எம்.எஸ்.கே.முஹம்மத் அப்துல் காதிர் (பாலப்பா)
(2) எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் புகாரீ
(3) கே.எம்.வாஸிம்
(4) சிராஜுத்தீன்
பொருளாளர்:
எம்.ஏ.முஹம்மத் ஜவஹர்
செயற்குழு உறுப்பினர்கள்:
(01) வி.என்.எம்.முஹம்மத் கவ்து
(02) எஸ்.அய்.அப்துல் ஹமீத்
(03) எஸ்.எம்.பி.செய்யித் அஹ்மத் அஜ்ஹர்
(04) ஏ.ஆர்.செய்யித் முஹ்யித்தீன்
(05) எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான்
(06) எம்.என்.செய்யித் முஹம்மத்
(07) எம்.எஸ்.செய்யித் அபூபக்கர் சித்தீக்
(08) டி.ஏ.டபிள்யு.அய்யூப்
(09) எம்.ஏ.அபுல் காஸிம்
(10) டபிள்யு.கே.ஏ.ஷாஹுல் ஹமீத்
(11) ஆர்.மொகுதூம் மீராஸாஹிப்
(12) எஸ்.எச்.ரிஸ்வான்
ஆலோசகர்கள்:
(1) ஆசிரியர் எம்.அப்துல் ரஸாக்
(2) எம்.எச்.எம்.சதக்கத்துல்லாஹ்
(3) துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை
மேற்கண்டவாறு நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு அமைக்கப்பட்டது.
செயல்திட்டங்கள்:
(1) இரத்த தானம்
(2) ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி ஏற்பாடுகள்
(3) மகளிர் முன்னேற்றம்
(4) சுற்றுச்சூழல் பாதுகாப்பு
(5) ஆபத்து காலங்களில் முதலுதவி
(6) நகர்நலப் பணிகளில் இதர அமைப்பினருக்கு உறுதுணை
ஆகியவற்றை முக்கிய செயல்திட்டங்களாகக் கொண்டு களப்பணியாற்ற தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில், காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார். அவர் தனதுரையில்,
*** நகரில் எத்தனை கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றபோதிலும், இப்பணியில் அந்த வேறுபாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்...
*** இளைஞர்கள் தமது முதற்கடமைகளான படிப்பு, பெற்றோர் - உற்றாருக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஐவேளைத் தொழுகை உள்ளிட்ட மார்க்கக் கடமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றுக்கான நேரங்கள் போக எஞ்சிய நேரத்தை மட்டுமே இந்த அமைப்பிற்காகத் தர வேண்டும்...
*** இந்த அமைப்பில் உள்ள இளைஞர்கள் தமக்கிடையில் நண்பர்கள் என்ற அடிப்படையில் மார்க்க வரைமுறைகளுக்குட்பட்டு கேளிக்கைகள் செய்துகொள்ளலாம்... அதே நேரத்தில், அக்கேளிக்கைகள் எக்காரணத்தைக் கொண்டும் இதர பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்யும் வகையில் அமைந்துவிடக் கூடாது...
*** அமைப்பின் செயல்திட்டங்களைப் பொருத்த வரை, ஏற்கனவே இத்திட்டத்தை வேறு அமைப்புகள் நகரில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமேயல்லாது, “நாங்களும் தனித்து செய்வோம்...” என்ற ரீதியில் செயல்பாடாதிருத்தல் வேண்டும்...
*** இந்த அமைப்பிலுள்ள இளைஞர்களின் ஆர்வத்துடன் கூடிய நகர்நலச் செயல்பாடுகளைப் பார்த்து, கவலை கொள்ளத்தக்க அளவில் செயல்பட்டு வரும் நகரின் இதர இளைஞர்கள் ஆர்வப்பட வேண்டும்... அவ்வாறு ஆர்வப்படும் இளைஞர்களை இந்த அமைப்பு கவர்ந்திழுத்து அவர்களை நெறிப்படுத்த வேண்டும்... என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், நகரின் படித்த இளைஞர்கள் மற்றும் தொழில் புரியும் இளைஞர்கள் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தகவல்:
ஆசிரியர் அப்துல் ரஸாக்,
ஆலோசகர்,
SAFE HANDS WELFARE ASSOCIATION,
காயல்பட்டினம். |