காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 32ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இம்மாதம் 07ஆம் தேதி மாணவர்களுக்கான ஆண்கள் நிகழ்ச்சியாகவும், 08ஆம் தேதி மாணவியருக்கான பெண்கள் நிகழ்ச்சியாகவும் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
துவக்க நாள் நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமை தாங்கினார். ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி எஸ்.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஹம்மத் உமர் ஃபாரூக் ரிஸ்வீ கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். ஆசிரியர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியர் ஸ்டீஃபன் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சாதனை மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் கல்விப் பரிசுகளை வழங்கியதோடு சிறப்புரையும் ஆற்றினார்.
பள்ளி அலுவலர் சரவணன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் மாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அன்றிரவு 07.00 மணிக்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மறுநாள் 08.01.2011 அன்று மாணவியர் பிரிவு விழா நடைபெற்றது. ஹாஜ்ஜா ஆர்.எஸ்.ஆயிஷா தலைமை தாங்கினார். ஹாஜ்ஜா வாவு ஜெய்னப், ஹாஜ்ஜா எம்.ஏ.சுபைதா, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜ்ஜா எம்.கே.எஸ்.கிதுரு ஃபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஹமீதா முஃபீதா கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். ஆசிரியை ஜெய்னப் நாச்சி வரவேற்றுப் பேசினார். ஆசிரியை எஸ்.எச்.ஜம்ஜம் ஹாஜரா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை திருமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சாதனை மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான மற்றும் கல்விப் பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
ஆசிரியை ஹலீமா ஸாஜிதா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் மாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அன்றிரவு 07.00 மணிக்கு மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இருநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் (சிங்கப்பூர்), துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியையர், மாணவ-மாணவியர் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம். |