தூத்துக்குடி மாவட்டத்தில் 35 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம், தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியது.இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்த 35 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி ஆறுமுகநேரி சபீதா முத்தையாபுரத்திற்கும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பீர்முகைதீன் ஆறுமுகநேரிக்கும்,
திருச்செந்தூர் பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்திற்கும், திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலைய சுப்பையா தூத்துக்குடி வடபாகத்திற்கும்,
திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய விமலாராணி குரும்பூருக்கும், சாத்தான்குளம் ஜெயபிரின்சஸ் திருச்செந்தூருக்கும்
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தகவல்:
தினத்தந்தி |