இந்தியாவில் சென்ற ஆண்டுக்கான உள்நாட்டு விமான போக்குவரத்து விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 118.54 லட்ச பேரும், ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் 134.78 லட்ச பேரும், ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் 119.84 லட்ச பேரும், அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் 147.05 லட்ச பேரும் உள்நாட்டு விமான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விமான சேவை நிறுவனங்கள் வாரியாக டிசம்பர் மாத போக்குவரத்து (மொத்தம் 52.13 லட்சம் பேர்) விபரங்கள் வருமாறு:-
கிங்க்பிஷர் - 9.72 லட்சம் பேர் (18.6 சதவீதம்)
இண்டிகோ - 9 .71 லட்சம் பேர் (18.6 சதவீதம்)
ஜெட் ஏர்வேஸ் - 9.24 லட்சம் பேர் (17.7 சதவீதம்)
ஏர் இந்தியா - 8.90 லட்சம் பேர் (17.1 சதவீதம்)
ஸ்பைஸ் ஜெட் - 7.21 லட்சம் பேர் (13.8 சதவீதம்)
ஜெட் லைட் - 3.99 லட்சம் பேர் (7.7 சதவீதம்)
கோ ஏர் - 3.36 லட்சம் பேர் (6.4 சதவீதம்)
விமான சேவை நிறுவனங்கள் வாரியாக டிசம்பர் மாத இடங்கள் நிரப்பப்பட்ட (Seat Factor) விபரங்கள் வருமாறு:-
இண்டிகோ - 93.3 சதவீதம்
ஸ்பைஸ் ஜெட் - 87.8 சதவீதம்
கோ ஏர் - 87.0 சதவீதம்
கிங்க்பிஷர் - 85.9 சதவீதம்
ஜெட் லைட் - 84.8 சதவீதம்
ஜெட் ஏர்வேஸ் - 80.1 சதவீதம்
ஏர் இந்தியா - 78.8 சதவீதம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross