பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது. அவரது மறைவுக்கு குவைத் காயல் நல மன்ற பொதுக்குழு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
குவைத் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம் 14.01.2011 அன்று, மன்றத் தலைவர் ஜனாப் எஸ்.எம்.ஹசன் மெளலானா அவர்களின் Salmiyaவிலுள்ள இல்லத்தில் மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
dஜனாப் வி.என்.எஸ்.அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாணவர் எச்.எம்.ஷேக் மதார் கிராஅத் ஓதினர். பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - எஸ்.கே. அவர்களின் மறைவிற்கு இரங்கல்:
கடந்த 12.01.2011 அன்று காலமான நமதூரின் சிறந்த சிந்தனையாளரும், பொதுநல ஆர்வலருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொருத்து, அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுப்பானாக, ஆமீன்.
தீர்மானம் 2 - புற்றுநோய் காரணி கண்டறிய CFFCக்கு நிதியுதவி:
நமதூரில் புற்றுநோய் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, அதற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள CCFFC குழுமத்திற்கு மன்றத்தின் சார்பில் RsRs 5,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - கல்லூரி மாணவிக்கு கல்வி உதவி:
எம்.பி.ஏ. படித்து வரும் ஒரு சகோதரிக்கு முதல் செமஸ்டர்க்கு வழங்கியது போல் இரண்டாம் செமஸ்டருக்கும் Rs 5,000/- உதவி செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத்திற்கு நிதியுதவி:
நமதூரில் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு பள்ளிச் சீருடைகள், பாடக் குறிப்பேடுகள் இலவசமாக வழங்குவதற்காக, வழமை போல் இந்த வருடமும் Rs 5,000/- IQRA விற்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - குடியுரிமைக்காக அவதியுறும் சகோதரருக்கு கடனுதவி:
குவைத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நமதூரைச் சேர்ந்த ஒரு சகோதரர் விசா பிரச்சினையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது பிரச்சினை தீர்ந்து, தடையின்றி அவர் பணிபுரிந்திடும் பொருட்டு, எமது மன்றம் மூலம் குவைத் தினார் 200/- அவருக்கு கடனுதவி செய்யப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் ஜனாப் ஹாமித் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.T.மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், குவைத். |